விபத்தில் 11 வயது பாடசாலை மாணவன் பலி
ஹெட்டிபொல, முனமல்தெனிய – கட்டுபொத வீதியில் அங்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (18) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கட்டுபொத பகுதியில் இருந்து முனமல்தெனிய நோக்கிச் சென்று கொண்டிருந்த அரச பேருந்தில் பாடசாலை விட்டு வந்திறங்கிய மாணவன் வீதியைக் கடக்க முற்பட்ட போது கட்டுபொத்த பகுதியை நோக்கிச் சென்ற சிறிய ரக லொறி ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த பாடசாலை மாணவர் குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவன் வலவ்வத்தை அனுக்கன்ஹேன பிரதேசத்தை சேர்ந்த தரம் 6 இல் கல்வி கற்கும் 11 வயதுடைய மாணவன் என தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹெட்டிபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.