Day: April 19, 2023

கல்வி அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் – ஜனாதிபதி எச்சரிக்கைகல்வி அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் – ஜனாதிபதி எச்சரிக்கை

அடுத்த வாரத்திற்குள் ஆசிரியர்கள் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபட இணக்கப்பாட்டுக்கு வர மறுத்தால் அவசரச் சட்டத்தின் கீழ் கல்வி அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி [...]

யாழில் தீவிரமடையும் கொரோனா – விடுக்கப்பட்ட எச்சரிக்கையாழில் தீவிரமடையும் கொரோனா – விடுக்கப்பட்ட எச்சரிக்கை

யாழ். குடாநாட்டில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேர் இனம் காணப்பட்ட நிலையில் அவர்களை தனிமைப்படுத்தல் விடுதியில் வைத்து ஒட்சிசன் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் [...]

கிளிநொச்சியில் மகனின் தாக்குதலில் தந்தை உயிரிழப்பு – தாயார் படுகாயம்கிளிநொச்சியில் மகனின் தாக்குதலில் தந்தை உயிரிழப்பு – தாயார் படுகாயம்

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயில் வாகனபுரம் கொழுந்துப்புலவு பகுதியில் மகனால் தாக்கப்பட்ட தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 1.00 மணியளவில் தந்தை தாய் மகனுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக மகனால் தாக்கப்பட்ட தந்தை படுகாயம் அடைந்த நிலையில் [...]

இந்தியாவிலிருந்து வந்த இலங்கையர் விமான நிலையத்தில் கைதுஇந்தியாவிலிருந்து வந்த இலங்கையர் விமான நிலையத்தில் கைது

இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெருந்தொகையான போதைக்காக பயன்படுத்தப்படும் மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் உப பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று (18) இந்த நபர் [...]

விபத்தில் 11 வயது பாடசாலை மாணவன் பலிவிபத்தில் 11 வயது பாடசாலை மாணவன் பலி

ஹெட்டிபொல, முனமல்தெனிய – கட்டுபொத வீதியில் அங்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (18) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கட்டுபொத பகுதியில் இருந்து முனமல்தெனிய நோக்கிச் சென்று கொண்டிருந்த அரச பேருந்தில் பாடசாலை [...]

பல பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடு தளர்வுபல பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடு தளர்வு

மேலும் பல பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடு தளர்த்தப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதன்மூலம் சுங்கம் எதிர்பார்த்த வருமான இலக்கை அடைய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கைத்தொழில், வீட்டு பாவனை மின்சார உபகரணங்கள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட [...]

கொழும்பு சென்ற பேருந்து விபத்து – ஒருவர் பலி, 10 பேர் படுகாயம்கொழும்பு சென்ற பேருந்து விபத்து – ஒருவர் பலி, 10 பேர் படுகாயம்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்புப் பகுதியில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. தம்புள்ளைக்கு அருகில் நேற்றிரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் டிப்பர் வாகன [...]

யாழில் கார் ஒன்றின் மீது வெடி குண்டு வீச்சுயாழில் கார் ஒன்றின் மீது வெடி குண்டு வீச்சு

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் , யாழ்.இந்து ஆரம்ப பாடசாலைக்கு அருகில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றின் மீது இனம் தெரியாத நபர்கள் வெடி குண்டு ஒன்றினை நேற்றிரவு வீசியுள்ளனர். குறித்த வெடி குண்டு வாகன திருத்தகத்தில் நின்ற கார் ஒன்றின் மீது [...]

இன்றைய வானிலை முன்னறிவிப்புஇன்றைய வானிலை முன்னறிவிப்பு

சப்ரகமுவ, மேல், மத்திய, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக [...]