மட்டக்களப்பு மாவட்டத்தில் புத்தாண்டுக்கான பொருட்கொள்வனவு

தமிழ்-சிங்கள புத்தாண்டு நாளை பிறக்கவிருக்கும் நிலையில் பொதுமக்கள் பொருட்கொள்வனவில் ஆர்வத்துடன் ஈடுபட்டுவருவதை காணமுடிகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதான நகரங்களில் பொதுமக்கள் பெருமளவில் புத்தாண்டுக்கான பொருட்கொள்வனவில் ஈடுபட்டுவருவதை காணமுடிகின்றது.
மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி நகருக்கு வரும் பெருமளவான மக்கள் புத்தாண்டுக்கான பொருட்கொள்வனவில் ஈடுபட்டுவருவதை காணமுடிகின்றது.
களுவாஞ்சிகுடி பொதுச்சந்தை பகுதியில் அனைத்துவிதமான பொருட்களையும் கொள்வனவுசெய்யும் நிலையினை காணமுடிந்தது.
விசேட போக்குவரத்து ஒழுங்குகள் புத்தாண்டை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் படுவான்கரை பகுதியிலிருந்து பெருமளவான மக்கள் வருகைதந்ததை காணமுடிந்தது.
கடந்த காலத்தில் பொருட்களை பெறுவதில் பெரும் கஸ்டங்களை பொதுமக்கள் எதிர்நோக்கியபோதிலும் இன்று அந்த நிலைமையானது ஓரளவு நீங்கி அனைத்து பொருட்களையும் கொள்வனவுசெய்யும் நிலையேற்பட்டுள்ளது.
எனினும் அரசாங்கம் பொருட்களுக்கான விலைகளை குறைத்துள்ளபோதிலும் வர்த்தக நிலையங்களில் விலைகள் குறையாத நிலையினையே காணமுடிகின்றது.