மூத்த ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் காலமானார்


இலங்கையின் மூத்த ஊடகவியலாளரும் ரொய்ட்டர்ஸ், பி.பி.சி. , வீரகேசரி உள்ளிட்ட ஊடகங்களின் ஊடகவியலாளருமான பொன்னையா மாணிக்கவாசகம் காலமானார்.

யுத்த காலத்தில் பல நெருக்கடியான சந்தர்ப்பங்களில் துணிச்சலுடன் செய்தி அறிக்கையிட்டவர். இவரது ஊடக சேவையை கௌரவிக்கும் முகமாக கடந்த 2019ஆம் ஆண்டு யாழ். ஊடக அமையம் விருது வழங்கி கௌரவித்து இருந்தது.

அன்னார் ஓய்வுபெற்ற வவுனியா தெற்கு பிரதி கல்விப்பணிப்பாளர் நாகேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும் வைத்திய கலாநிதி பவித்திராவின் பாசமிகு தந்தையும் வைத்தியகலாநிதி தினேஸின் அன்பு மாமனாரும் தனேந்திராவின் பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் வவுனியா வைரவபுளியங்குளம் 10 ஆம் ஒழுங்கையில் உள்ள அன்னாரின் இல்லத்தில்நாளை காலை 7 மணிக்கு கிரியைகள் ஆரம்பித்து 9 மணிக்கு தட்சனாங்குளம் இந்து மயானத்தில் அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *