மாணவனுக்கு மது கொடுத்து பலாத்காரம் – ஆசிரியை கைது
கேரள மாநிலம் திருச்சூர் அருகே ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவனின் நடவடிக்கையில் மாற்றங்கள் ஏற்பட்டது. இதை கவனித்த ஆசிரியர்கள் மாணவனை கவுன்சிலிங்கிற்கு அழைத்தனர். கவுன்சிலிங்கில் ஆசிரியர்கள் பலமுறை கேட்ட போதும் அந்த மாணவன் முதலில் பதில் எதுவும் சொல்லவில்லை.
இறுதியில் தன்னை டியூஷன் ஆசிரியை மது கொடுத்து பலாத்காரம் செய்ததாக ஆசிரியரிடம் கூறினான். அதைக்கேட்டு ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் அந்த டியூசன் ஆசிரியையிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் டியூசனுக்கு வந்த மாணவனுக்கு மதுவை குடிக்க வைத்து தனது வலையில் வீழ்த்தி பலாத்காரம் செய்ததை அந்த ஆசிரியை ஒப்பு கொண்டார். அதைதொடர்ந்து போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து டியூசன் ஆசிரியையை கைது செய்தனர்.