புகைரதம் தடம்புரண்டு விபத்து – 16 பேர் படுகாயம்
திருகோணமலை நோக்கி பயணித்த உதயதேவி புகைரதம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டதுடன்
ரயில் தண்டவாளம் , சிலிப்பர் கட்டைகளும் உடைந்துள்ளன. இந்நிலையில் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.