வெளிநாட்டு பெண்ணை நாசம் செய்த இலங்கை தாத்தா
தொல்பொருள் இடங்களைப் பார்வையிடச் சென்ற வெளிநாட்டு சுற்றுலாப் பெண் பயணி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலன்னறுவையில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலன்னறுவை சுற்றுலா பொலிஸார் தெரிவித்தனர்.
போலந்து பிரஜையான 43 வயதுடைய இந்தப் பெண், பொலன்னறுவை பூஜை செய்யும் இடம் ஒன்றில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸில் செய்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் இடம்பெற்று சில மணித்தியாலங்களின் பின்னர் அதே தொல்பொருள் பிரதேசத்திலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் சுற்றுலாப் பயணிகளுக்கு பொருட்களை விற்பனை செய்பவர் என விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் பெண்ணை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவர் பொலன்னறுவை ஹத்தமுனாபாறை பிரதேசத்தில் வசிக்கும் 72 வயதுடைய நபர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.