பெண் உறுப்பினுள் ஐபோன் – சிறைசாலையில் திலினிக்கு நடந்தது என்ன?


”6 சிறைச்சாலை அதிகாரிகள் தன்னைச் சூழ்ந்து கொண்டனர். தன்னை கட்டாயப்படுத்தி படுக்க வைத்து இருவர் தனது இரு கால்களையும் அகட்டி பிடித்துக் கொண்டிருந்தனர்.

மற்றைய இருவர் தனது கைகளையும் தலையையும் ஆட்டாமல் பிடித்துக் கொண்டிருந்தனர். ஒருவர் எனது ஆடைகளை களைந்துவிட்டு தனது கைகளை முழுமையாக எனது பெண் உறுப்பினுள் செலுத்தினார்.

ஒரு அதிகாரி தன்னை பார்த்துக் கொண்டு பக்கத்தில் இருந்தார்.நான் வேதனை தாங்காது கத்திய போது அதை பொருட்படுத்தாது கைகளால் எனது பெண் உறுப்பில் வேதனை வரும் வகையில் தோண்டினார்கள். தனது பெண் உறுப்பின் உள்ளேயும் வெளியேயும் நகங்கள் பட்ட காயங்களும் கிழிவடைந்த காயங்களும் காணப்படுகின்றன.

அத்துடன் எனது குதப்பகுதிக்குள்ளும் கையை முழுமையாக விட்டு பரிசோதித்தனர். அங்கும் காயங்கள் உள்ளது” என திலினி பிரியமாலி தனது சட்டத்தரணிகளுக்கு அழுதவண்ணம் தெரிவித்ததாக சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறைக்குள் திலினி பிரியமாலி அதிகாரிகளுக்கு தெரியாது மறைத்து வைத்து கைத் தொலைபேசி பாவித்து வந்ததாகவும் பல தடவைகள் அவரது இருப்பிடத்தை பரிசோதித்தும் கைத் தொலைபேசியை கண்டு பிடிக்க முடியாததால் அவர் பெண் உறுப்பில் அல்லது குதப்பகுதிக்குள் தொலைபேசி மற்றும் சிம் அட்டையை மறைத்து வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்திலேயே அவரது உடலை பரிசோதனைக்கு உட்படுத்தியதாக சிறைச்சாலை வட்டாரங்களில் இருந்து அறிய முடிந்ததாக குறித்த இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறை அதிகாரிகள் திலினியின் இருப்பிடத்திற்கு வருவதை கண்ட திலினி தனது கைத் தொலைபேசியை மலசல கூட குழிக்குள் எறித்து விட்டிருக்கலாம் எனவும் அவர் நவீன ரக ஐபோன் ஒன்றையும் சிறைக்கு வரும் போது தனது அந்தரங்கப் பகுதிக்குள் செலுத்தி கொண்டு வந்ததாக சிறைச்சாலை அதிகாரிகள் உறுதிப்படுத்திய பின்னரே இந்த சோதனை நடந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்ததாக சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *