குங்குமப்பூ சாப்பிட்டால் இவ்வளவு ஆபத்தா

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

விலை அதிகமாகவும் மிக அரிதாகவும் கிடைக்ககூடிய குங்குமப்பூவை பலரும் உட்கொள்கின்றனர்.

ஆனால் குங்குமப்பூவும் அதிகம் சாப்பிடும்போது பல உடல்நல பிரச்சினைகளை ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.

கர்ப்பிணி பெண்கள் குழந்தை ஆரோக்கியமாகவும், அழகாகவும் பிறக்க குங்கும பூ சாப்பிடுகின்றனர்.

குங்கும பூவை காய்ச்சிய பாலில் 5 கிராம் அளவு மட்டுமே போட்டு குடிக்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள் குங்கும பூ அதிகம் எடுத்துக் கொண்டால் 5 மாதத்திற்கு பின்னும் வாந்தி, தலை சுற்றல் ஏற்படும் வாய்ப்புள்ளது.

குங்கும பூவை அதிகம் எடுத்துக் கொள்ளும்போது பசி எடுப்பது குறைவதுடன், செரிமான பிரச்சினை ஏற்படும். அதிகமான குங்கும பூவை சாப்பிடும்போது ஆசன வாயில் ரத்தம் வெளியேறுதல், மூக்கில் ரத்தம் வெளியேறுதல் ஆகியவை ஏற்படலாம்.

குங்கும பூவை அதிகம் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை போன்ற நாள்பட்ட நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. தினசரி 5 கிராம் அளவிற்கு மேல் குங்கும பூ எடுக்க வேண்டாம் என மருத்துவர் பரிந்துரை செய்துள்ளார்கள்.