பூண்டு சாப்பிடுவது ஆபத்தா?


தினசரி சமையலில் பயன்படுத்தப்படும் பூண்டு மருத்துவ குணம் மிக்கது. அதேசமயம் பூண்டை சிலர் உணவில் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை பயக்கும் என கூறப்படுகின்றது.

எனினும் நீரிழிவு நோயாளிகள் ,சமீபத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் பூண்டை சேர்த்துக்கொள்ளக் கூடாது என சொல்லப்படுகின்றது.

யாரெல்லாம் பூண்டு சாப்பிடக்கூடாது?
பூண்டு சாப்பிடுவதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு வெகுவாக குறையும் என்பதால் நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.

சமீபத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் கார உணவுகள், பூண்டு சேர்த்த உணவுகள் தவிர்ப்பது நல்லது.

பூண்டில் உள்ள அலிசின் கல்லீரல் நச்சை அதிகரிக்கும். இதனால் கல்லீரல் பிரச்சினை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.

பூண்டில் உள்ள சல்பர் காரணமாக அதிகமாக சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் ஏற்படலாம்.

பச்சை பூண்டை சாப்பிடுவதால் சிலருக்கு தலைவலி ஏற்பட்டும் வாய்ப்பு உள்ளது.

அதிகம் பூண்டு சாப்பிடுவது நெஞ்சு எரிச்சல், செரிமான கோளாறை ஏற்படுத்தலாம்.

அலர்ஜி உள்ளவர்கள் பூண்டு சாப்பிடுவதால் தோல் அரிப்பு, தடிப்பு உண்டாகும் வாய்ப்பு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *