முல்லைத்தீவில் 14 வயது சிறுவன் விபரீத முடிவெடுத்து உயிரிழப்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 14 வயதுடைய சிறுவன் ஒருவர் தவறான முடிவெடுத்துள்ள நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (04.10.2024) இரவு இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டார பகுதியினை சேர்ந்த அபிசன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வீட்டில் பெற்றோர்களுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக சிறுவன் இவ்வாறான விபரீத முடிவுவெடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், சிறுவனின் உடலம் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post

சீனாவுக்கு ஜோ பைடன் விடுத்த எச்சரிக்கை
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இடையேயான சந்திப்பைத் [...]

பொலிஸார் மீது தாக்குதல் – 6 மாணவர்கள் கைது
கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ பகுதியில் 2 பொலிஸ் அதிகாரிகளை தாக்கிய 5 [...]

முல்லைத்தீவில் 9A எடுத்த மாணவன் தற்கொலை
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் 21 வயதான அபிஷன் என்ற மாணவன் விபரீத முடிவால் [...]