நாம் உண்ணும் சில உணவு உடலுக்கு ஒவ்வாமை ஏற்படுத்துவதோடு சில சமையங்களில் விஷமாக மாரும் தருனமும் உள்ளது அவ்வாறு எந்த உணவோடு எதை சாப்பிடக்கூடாது என நாம் இங்கு தெரிந்து கொள்வோம்.
தயிருடன் கீரையை சேர்த்து சாப்பிடக் கூடாது. இரண்டுமே செரிமானமாக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். தூங்கச் செல்வதற்கு முன்னரும் கீரை, தயிரை உணவோடு சேர்த்துக்கொள்ளக் கூடாது. அதேபோல கீரையை அதிக நேரம் வேகவைக்கக் கூடாது. சமைத்த மூன்று மணி நேரத்துக்குள் சாப்பிட்டுவிட வேண்டும். இல்லையென்றால், அதிலுள்ள சத்துகள் வீணாகி விடும் செரிமானமும் கடினமாகும்.
நெய்
நெய்யை உருக்காமல் சாப்பிடக் கூடாது. சாப்பிடுவதற்கு முன்னர் சூடுபடுத்தி, எண்ணெய் மாதிரியாக்கித்தான் பயன்படுத்த வேண்டும் அல்லது சூடான உணவில் சேர்த்துச் சாப்பிட வேண்டும். அப்படிச் சாப்பிடும்போது நெய்யும் எளிதில் செரிமானமாகும், உணவு எளிதாக செரிமானமாகவும் உதவும்.
தேனையும் நெய்யையும்
தேனையும் நெய்யையும் ஒன்றாகக் கலந்து சாப்பிடக் கூடாது. தேனை சூடான உணவுடன் சேர்த்தோ, சூடு செய்தோ சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால் அதிலுள்ள சத்துகள் கிடைக்காது.
வாழைப்பழத்துடன் தயிர்
வாழைப்பழத்துடன் தயிர், மோர் சாப்பிடக்கூடாது
பழங்களைத் தனியாகத்தான் சாப்பிட வேண்டும். உணவோடு சேர்த்துச் சாப்பிடக் கூடாது. வாழைப்பழம் சாப்பிடும்போது தயிர், மோர் சேர்த்துக் கொள்ளக் கூடாது. உணவுக்குப் பின்னர் வாழைப்பழம் சாப்பிடலாம். வெறும் வயிற்றிலோ, பசியாக இருக்கும்போதோ வாழைப்பழம் சாப்பிடக் கூடாது.
மீனுடன் பால்
மீன், கருவாடு சாப்பிடும்போது தயிர், மோர் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. மீனுடன் பால் சேர்த்து உட்கொண்டால் வெண்புள்ளிகள் வரும் வாய்ப்புகள் உண்டு. எனவே இரண்டையும் சேர்த்து சாப்பிடக் கூடாது.