நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் பிஸ்தா

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உண்பதற்கு ஏற்ற நட்ஸ் வகைகளுள் பிஸ்தாவும் ஒன்று என கூறப்படுகின்றது.

பிஸ்தா பருப்பு மிகுந்த ஊட்டச்சத்து கொண்டது. உதாரணமாக சுமார் 28 கிராம் பருப்பில் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, புரதம், பொட்டாசியம், துத்தநாகம், பாஸ்பரஸ், வைட்டமின் பி6 மற்றும் மாங்கனீஸ் அதிக அளவு உள்ளன.

பிஸ்தா பருப்பில் மிக அதிகமாக ஆன்டி-அக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை எல்லாமே மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை தரும்.

பிஸ்தா பருப்பு இதயத்திற்கு நன்மை தரும் கொழுப்பை கொண்டிருப்பதால் பல்வேறு இதய வியாதிகளை தடுக்கும் தன்மை கொண்டது.

இது கெட்ட கொழுப்பை குறைத்து இதய நோய்கள் வருவதை 12% வரை குறைக்கும். மன அழுத்தத்தினால் வரும் இரத்தக் கொதிப்பை பிஸ்தா பருப்பு நல்ல வகையில் கட்டுப்படுத்தும்.

இரத்த குழாய்களை விரிவடைய செய்து, நல்ல இரத்த ஓட்டத்தை உண்டாக்கி இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. பிஸ்தா சாப்பிட்டபிறகு உடலில் க்ளுகோஸ் மற்றும் இன்சுலின் அளவு குறைவாக இருப்பதை பல ஆய்வுகள் உறுதிப்படுத்தி உள்ளது.

இது பெப்டைட் 1 என்னும் ஹார்மோன் அளவை அதிகரித்து உடலின் க்ளுகோஸ் அளவை சீராக வைக்கிறது. பிஸ்தாவில் உள்ள நார்ச்சத்து உணவு செரிமானத்தை சீர் செய்து மலச்சிக்கலை தடுக்கிறது மற்றும் இந்த நார்ச்சத்து குடலில் நல்ல பாக்டீரியா வளர்ச்சிக்கு உதவுகிறது.

குடலில் உள்ள பாக்டீரியா இந்த நார்ச்சத்தை நொதிக்கச்செய்து மற்றும் பல நன்மைகளை கொண்ட குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலங்களை உற்பத்தி செய்கிறது.

.உடலில் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கச் செய்யும். பிஸ்தா பொதுவாகவே பசி உணர்வை கட்டுப்படுத்தி நீண்ட நேரம் சோர்வின்றி உணர வைக்கும்.

பிஸ்தாவில் ஆரோக்கியமான கொழுப்பும், புரதமும், நார்ச்சத்தும் நிறைந்துள்ளன. இவை ரத்தத்தில் சர்க்கரை அளவு உயராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

பிஸ்தாவில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக இருப்பதால் ரத்த சர்க்கரை அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.

இதனால் பிஸ்தா, நீரிழிவு நோய்க்கு ஏற்ற நட்ஸ் வகையாக கருதப்படுகிறது. ஆனால், நீரிழிவு நோயாளிகள் 50 கிராம் வரை தினமும் பிஸ்தா உட்கொள்ளலாம்.

அதே சமயம் நீரிழிவு நோயாளிகள் உப்பு சேர்க்கப்பட்டிருக்கும் பிஸ்தாவை சாப்பிடக்கூடாது.