கிளி பளையில் இளம் குடும்பஸ்தர் மீது கனரக வாகனத்தால் மோதி கொலை
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இந்திராபுரம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.
குறித்த விபத்து நேற்று பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இந்திராபுரம் பகுதியில் ஏ9 வீதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பளை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் மீது பின்னால் சென்ற கனரகவாகனம் மோதிதில் சம்பவ இடத்திலேயே குறித்த குடும்பஸ்தர் பலியாகியுள்ளார்.
சடலம் பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குடும்ப தகராறு காரணமாக குறித்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்