யாழ் பருத்தித்துறையில் 10 படகுகள் தீக்கிரை


யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் நாகர்கோவில் மேற்கு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 படகுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வந்த படகுகள் தற்போது தொழிலில் ஈடுபடாமல் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் தீ வைக்கப்பட்டுள்ளது.

புத்தளம், தில்லையடி, அல்ஜித்தா எனும் முகவரியில் வசிக்கும் சாகுல் ஹமீது ஜௌபர் என்பவருக்குச் சொந்தமான படகுகளே இவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான காரணம் மற்றும் சந்தேக நபர்களோ இதுவரை அறியப்படவில்லை .

இது தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *