Day: March 22, 2023

ஆற்றிலிருந்து பெண் சிசுவின் சடலம் மீட்புஆற்றிலிருந்து பெண் சிசுவின் சடலம் மீட்பு

பொகவந்தலாவை, லொய்னோன் கெசல்சமுவ ஓயாவில் இருந்து பெண் சிசுவின் சடலம் ஒன்று புதன்கிழமை (22) மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர். மரக்கறித் தோட்டத்தில்வேலை செய்து கொண்டிருந்த நபர் ஒருவர் சிசுவின் சடலம் மிதந்து கொண்டிருப்பதைக் கண்டு பொகவந்தலாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து [...]

நீர்வீழ்ச்சியில் மாயமான 4 பேரின் சடலங்களும் மீட்புநீர்வீழ்ச்சியில் மாயமான 4 பேரின் சடலங்களும் மீட்பு

வெல்லவாய எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்று காணாமல் போன மூன்று இளைஞர்களின் சடலங்கள் இன்று புதன்கிழமை (22) மீட்கப்பட்டுள்ளன. நேற்று ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் காணாமல் போன ஏனைய மூவரின் சடலங்களுமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் இருந்து மொனராகலை [...]

யாழ் பருத்தித்துறையில் 10 படகுகள் தீக்கிரையாழ் பருத்தித்துறையில் 10 படகுகள் தீக்கிரை

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் நாகர்கோவில் மேற்கு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 படகுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வந்த படகுகள் தற்போது தொழிலில் ஈடுபடாமல் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் [...]

17 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 23 வயது இளைஞன் கைது17 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 23 வயது இளைஞன் கைது

கொழும்பில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 23 வயது இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, குறித்த பெண்ணுடன் இளைஞன் காதல் உறவைப் பேணி, [...]

யாழ் போதனா வைத்தியசாலை விடுதியில் இருந்து வீசப்பட்ட சிசுயாழ் போதனா வைத்தியசாலை விடுதியில் இருந்து வீசப்பட்ட சிசு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 22ஆம் இலக்க மேல்மாடி விடுதியில் இருந்து கீழே வீசப்பட்ட சிசுவின் சடலம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர். உடைந்த நிலையில் இருந்த நீர் குழாய் ஒன்றின் ஊடாக சிசுவின் சடலம் கீழே விழுந்துள்ளது. சட்டவிரோதமான [...]

கட்டுப்பாட்டு விலையை மீறி முட்டை மற்றும் அரிசி விற்பனை – 3 லட்சம் அபராதம்கட்டுப்பாட்டு விலையை மீறி முட்டை மற்றும் அரிசி விற்பனை – 3 லட்சம் அபராதம்

கட்டுப்பாட்டு விலைக்கு மேல் முட்டை உள்ளிட்ட நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொரலஸ்கமுவ, பொகுந்தர பொருளாதார மத்திய நிலையம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள பல கடைகளின் வர்த்தகர்களுக்கே, கெஸ்பேவ நீதவான் நீதிமன்றம் இவ்வாறு அபராதம் [...]

துண்டாக்கப்பட்ட மின்சார சபை ஊழியரின் கைகள்துண்டாக்கப்பட்ட மின்சார சபை ஊழியரின் கைகள்

மொறட்டுவை பிரதேசத்தில் நபர் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதையடுத்து மின் பொறியியலாளரின் கைகள் வெட்டப்பட்டதுடன் சந்தேகநபர் வெட்டிய கைகளுடன் தப்பியோடிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இரு தரப்பினருக்குமிடையே இருந்த முன் விரோதம் காரணமாக பாதிக்கப்பட்டவரின் கைகள் முழங்கையில் துண்டிக்கப்பட்டு எடுத்து செல்லப்பட்டதாக [...]

விபத்தில் சிறுமி பலி – தாயின் கரு கலைந்ததுவிபத்தில் சிறுமி பலி – தாயின் கரு கலைந்தது

ஹட்டன்- அவிசாவளை வீதியில் கித்துல்கல இங்கிரியாவத்தை எனுமிடத்தில் திங்கட்கிழமை (20) இடம்பெற்ற விபத்தில் ஐந்து வயதான சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்த மேலும் மூவர், கித்துல்கல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவ தினத்தன்று மாலை 3.20 [...]

வரிக் கொள்கையில் மாற்றங்கள் – ஜனாதிபதி அறிவிப்புவரிக் கொள்கையில் மாற்றங்கள் – ஜனாதிபதி அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி மூலம் வீழ்ச்சியடைந்த நாட்டை வழமைக்கு கொண்டு வர முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த கடன் வசதியை பெற்றுக்கொள்வதன் மூலம் இலங்கை மீண்டும் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்படும் என ஜனாதிபதி [...]

தரம் 5 புலமைப்பரிசில் – பாடசாலை ரீதியிலான வெட்டுப்புள்ளிகள்தரம் 5 புலமைப்பரிசில் – பாடசாலை ரீதியிலான வெட்டுப்புள்ளிகள்

2022 ஆம் ஆண்டு 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், இந்த ஆண்டுக்கான 6 ஆம் தரத்தில் மாணவர்களை பாடசாலைகளுக்கு சேர்த்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலுக்கு அமைய பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் [...]

கல்வி அமைச்சின் விசேட அறிவிப்புகல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

நாட்டிலுள்ள அனைத்து தேசிய பாடசாலைகளிலும் பத்தாண்டு மற்றும் வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்கள் தற்போதைய பரிந்துரைகளின்படி, பின்வரும் காரணங்களுக்காக விசேட மேன்முறையீடுகளுக்கு உட்பட்ட ஆசிரியர்களைத் தவிர ஏனைய இடமாற்றங்கள் 17.04.2023 முதல் நடைமுறைக்கு வரும். G.E.C-ல் கற்பிக்கும் ஆசிரியர்களின் இடமாற்றத்தால் குழந்தைகளுக்கு ஏதேனும் [...]

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என [...]