நுவரெலியாவில் தேயிலை தொழிற்சாலை தீக்கிரை

நுவரெலியா – கந்தப்பளை, பார்க் தோட்டத்துக்குட்பட்ட சந்திரகாந்தி (எஸ்கடேல்) தோட்டப் பிரிவில் பழமையான தேயிலை தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் குறித்த தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
பல வருட காலமாக மூடிய நிலையில் காணப்பட்ட இத் தொழிற்சாலையானது, தனியார் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் பார்க் தோட்ட முகாமைத்துவம் அதனை பொறுப்பேற்றது. அங்கு கழிவு தேயிலை அறைக்கப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையிலேயே இன்று (18) அதிகாலை தொழிற்சாலை திடீரென தீப்பரவல் ஏற்பட்டு, தீ கொளுந்துவிட்டு எரிந்துள்ளது.
கந்தப்பளை பொலிஸார், தோட்ட மக்கள் மற்றும் நுவரெலியா மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயை அணைக்க முற்பட்டபோதிலும், தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
தீ விபத்து தொடர்பான விசாரணைகளை கந்தப்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவத்தின்போது தொழிற்சாலையில் தொழிலாளர்கள் எவரும் இருக்கவில்லை. இழப்பு தொடர்பில் இன்னும் உரிய வகையில் மதிப்பீடு இடம்பெறவில்லை.
Related Post

அனைத்து கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும் – சிவாஜிலிங்கம் கோரிக்கை
அனைத்து கட்சிகளும் எவ்வித பேதமின்றி இணைந்து போதைப்பொருள் பாவனைக்கு எதிராக செயற்பட வேண்டும் [...]

புகையிரதக் கட்டணத்தில் மாற்றம் இல்லை
டீசல் விலை குறைந்துள்ள போதிலும், புகையிரதக் கட்டணத்தை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கலந்துரையாடப்படவில்லை [...]

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதி கிடையாது – டக்ளஸ்
இலங்கை கடற்பரப்பில் ஒரு நிமிடம் கூட இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி கிடையாது [...]