பாராளுமன்ற நடவடிக்கை – சுற்றியுள்ள வீதிகளுக்கு பூட்டு

பாராளுமன்ற நடவடிக்கைகளை தடையின்று முன்னெடுக்கும் நோக்கில் பாராளுமன்றத்தை சுற்றியுள்ள வீதிகளை பொலிஸார் மூடியுள்ளனர்.
அதனடிப்படையில், தியத்த உயன சந்தியில் (பொல்துவ சந்தி) இருந்து ஜயந்திபுர சந்தி வரையும், ஜயந்திபுர சந்தியில் இருந்து கியன்ஹாம் சந்தி (டென்சில் கொப்பேகடுவ வீதி) வரையும் பாராளுமன்ற அணுகு வீதிகள் இன்றும் நாளையும் (06) மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்றத்தை சுற்றி பொதுமக்கள் போராட்டம் நடத்துவதால் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களின் நடமாட்டத்திற்கு இடையூறு ஏற்படலாம் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இதனால், எவ்வித இடையூறும் இன்றி பாராளுமன்றத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலையில், குறித்த வீதிகளை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பாராளுமன்ற வீதிக்கு செல்லும் இடைப்பாதைகளும் அக்காலப்பகுதியில் மூடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
மாற்று வழிகள் இல்லாத அந்த எல்லைக்குள் வசிக்கும் குடியிருப்பாளர்கள் தங்கள் அடையாளத்தை உறுதி செய்வதன் ஊடாக பயணிக்க அனுமதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.