அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள எச்சரிக்கை

2021 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு செய்யப்பட்ட அறிக்கைகளை, 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்கத் தவறினால், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகக் கருதப்படும் உரிமை இரத்து செய்யப்படும் என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமது கணக்கு அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு அரசியல் கட்சிகளுக்கு பல தடவைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதுவரை 2021 ஆம் ஆண்டிற்கான கணக்கு அறிக்கையை சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகள் நேற்று முதல் 14 நாட்களுக்குள் அதைச் சமர்ப்பிக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் நேற்று கூடிய போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
Related Post

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
தற்போது நிலவும் வானிலையுடன் செப்டம்பர் மாத இறுதியில் இருந்து டெங்கு நோயாளர்கள் அதிகரித்து [...]

மின்வெட்டு தொடர்பான முக்கிய அறிவிப்பு
இன்று மற்றும் எதிர்வரும் 29 ஆம் திகதி மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப் [...]

ரயில்வே திணைக்களத்தை மறுசீரமைக்கும் முயற்சி – இணை அழைப்பாளர் எஸ்.பி.விதானகே
ரயில் பயணங்களை ரத்து செய்து ரயில்வே திணைக்களத்தை மறுசீரமைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு [...]