ரயில்வே திணைக்களத்தை மறுசீரமைக்கும் முயற்சி – இணை அழைப்பாளர் எஸ்.பி.விதானகே

ரயில் பயணங்களை ரத்து செய்து ரயில்வே திணைக்களத்தை மறுசீரமைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டணியின் இணை அழைப்பாளர் எஸ்.பி.விதானகே தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் பல்வேறு யுக்திகளை கையாண்டு ரயில்வே திணைக்களத்தை மறுசீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டாலும், தொழிற்சங்கங்கள் அதற்கு வாய்ப்பளிக்காது என அவர் தெரிவித்துள்ளார்..
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே எஸ்.பி.விதானகே இவ்வாறு தெரிவித்தார்.
“ரயில் பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டதால் ரயில் பயணிகளுக்கு ரயில் பயணங்கள் விரக்தியடைந்து விட்டது. ரயில் ஊழியர்களை விரக்தியடையச் செய்து தற்போது என்ன நடக்கிறது? அமைச்சர் வாயை திறந்தால் ரயில்வே திணைக்களத்தை மறுசீரமைப்பது தொடர்பில் குறிப்பிடுகிறார். முடிந்தால் ரயில் அதிகார சபை ஒன்றை நிறுவுங்கள். மறுசீரமைப்பு செய்தால் அதற்கு எதிராக அனைத்து ஊழியர்களையும் திரட்டுவோம்.”
Related Post

களனி பல்கலைக்கழகத்தின் முன் பதற்றம் – (காணொளி)
களனி பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை கலைக்க பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகை [...]

யாழ்ப்பாணத்தில் 600 லீற்றர் டீசல் பதுக்கிவைத்திருந்த நபர் கைது
யாழ்.மானி்பாய் – சோதிவேம்படி பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடாத்திய சுற்றிவளைப்பு தேடுதலில் [...]

உக்கிரமடையும் போருக்கு மத்தியில் இஸ்ரேல் வந்த ஆண்டனி பிளிங்கன்
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் மீண்டும் இஸ்ரேலுக்கு சென்றுள்ளார். காசா மீது [...]