ஒரு வாரம் பெண்ணுடன் தனி வீட்டில் – பிடித்திருந்தால் திருமணம்

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

கம்போடிய நாட்டில் வசிக்கும் குறும் கிரைப் என்ற பழங்குடி இனத்தினை சேர்ந்தவர்கள் கல்யாண வயதினை அடைந்த பெண்களை காடுகளில் அமைக்கப்பட்ட குடில்களில் தனியாக வாசிக்க விடுகின்றமை வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறாக தனியாக விடப்பட்ட பெண்ணை திருமணம் செய்துகொள்ள விரும்பும் ஆண் அந்த பெண்ணின் தந்தைக்கு ஒரு எருமை மாட்டினை வரதட்சணையாக வழங்குகின்றனர்.

பின்னர் ஒரு வாரங்கள் அந்த பெண்ணுடன் தனியாக அந்த குடிலில் வாழுவதற்கு அனுமதி வழங்கபடுகின்றது.

இவ்வாறாக ஒரு வாரம் தனியாக வாழும் போது குறித்த பெண்ணிற்கு அந்த ஆணை பிடிக்குமாயின் உடனடியாக இருவருக்கும் திருமணம் செய்து வைக்கப்படுகிறது.

மாறாக அவரை பெண்ணிற்கு பிடிக்கா விடில் வேறொரு ஆணிடம் ஒரு எருமையினை வரதட்சணையாக வாங்கிய பின்னர் மீண்டும் அந்த பெண்ணுடன் ஒரு வாரங்கள் தனியாக வாழ விடுகின்றனர்.

அவ்வாறு விடப்படும் போது அந்த ஆணிற்கு பெண்ணை பிடிக்காவிடிலும், பெண்ணிற்கு ஆணை பிடிக்கும் பட்சத்தில் திருமணம் செய்து வைக்கின்றனர்.