பாடசாலைகள், வங்கிச் சேவைகள் நாளை முடக்கம்
அரசாங்கத்தின் அசாதாரண வரி அறவீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்களும் ஆதரவு வழங்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கின்றார்.
எனினும், பாடசாலை கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும் என அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, நாடு முழுவதும் உள்ள வங்கிச் சேவைகள் நாளைய தினம் ஸ்தம்பிதமடையும் சாத்தியம் உள்ளதாகவும் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் ஷன்ன திஸாநாயக்க கூறினார்.