யாழ் வடமராட்சியில் 2 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு
யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் புற்று நோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் விஜயரட்ணம் லலித்குமார் வயது 44 என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை புற்று நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
இதேவேளை ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் ஒருவரும் நேற்றைய தினம் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் இரு இளம் பராயத்தினரும் புற்று நோயால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.