சிரேஷ்ட மாணவர்களால் தாக்கப்பட்ட 5 மாணவர்கள் வைத்தியசாலையில்

களனி பல்கலைக்கழக விடுதி ஒன்றில் மாணவர்கள் குழு ஒன்று தடுத்து வைக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளது.
களனி பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர்கள் குழு ஒன்று கன்னங்கர விடுதியில் மாணவர்கள் குழு ஒன்றைத் தடுத்து வைத்து பல மணிநேரம் தாக்கியுள்ளது என்று கூறப்படுகின்றது.
சிரேஷ்ட மாணவர்களால் தாக்கப்பட்டனர் எனக் கூறி 5 மாணவர்கள் ஹோமாகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர்.
கலைப்பிரிவில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்கும் 5 மாணவர்களே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர் என்றும் பொலிஸார் கூறினர்
அரநாயக்க, கலவான, பரகடுவ, வத்தேகம மற்றும் கஹவத்த பிரதேசங்களில் வசிக்கும் மாணவர்களே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post

முல்லைத்தீவில் திருமணமாகி 5 மாதங்களில் பெண் உயிரிழப்பு
முல்லைத்தீவு – மல்லாவி கொல்லவிளாங்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் பரிதாபமாக [...]

செயற்கைக்கோள்களை அழிக்கக்கூடிய அணு ஆயுதம்
பாரிய ஆற்றல் அலையை உருவாக்கி செயற்கைக்கோள்களை அழிக்கக்கூடிய அணு ஆயுதத்தை உருவாக்க ரஷ்யா [...]

விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கிச் சூடு – இருவர் பலி
காவல்துறை விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் [...]