யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலகம் ஒரு கட்சிக்கான அலுவலகம் அல்ல

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலகம் ஒரு கட்சிக்கான அலுவலகம் அல்ல, கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, நீல வர்ணம் பூசப்பட்டு இருக்குமாயின் அது உடனடியாக அகற்றப்படும் என யாழ் மாவட்ட செயலர் அ,சிவபாலசுந்தரன் தெரிவித்தார்
யாழ் மாவட்ட செயலகத்தில் உள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்திற்கு நீல நிற வர்ணம் பூசப்பட்டுள்ளமை தொடர்பில் கேட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
யாழ் மாவட்ட செயலகத்தில் உள்ள ஒருங்கிணைப்பு குழு அலுவலகம் ஒருங்கிணைப்பு குழு அலுவலமே தவிர அது கட்சி அலுவலகம் அல்ல.
ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தில் ஏதாவது கட்சி சார்பான வர்ணம் தீட்டப்பட்டிருந்தால் அது உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என உறுதி அளித்தார்.
Related Post

பொது மக்களின் உதவியை நாடியுள்ள வவுனியா பொலிசார்
வவுனியாவில் விபத்தை ஏற்படுத்தி ஒருவர் உயிரிழக்க காரணமான நபரை கண்டறிய வவுனியா பொலிசார் [...]

யாழில் மாணவியை துன்புறுத்திய ஆசிரியை – பணத்தை கொடுத்து சமாளிக்க பாடசாலை நிர்வாகம் முயற்சி
சித்தன்கேணி ஸ்ரீ கணேச வித்தியாலயத்தில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவியை அடித்துத் [...]

யாழில் மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் – ஒருவர் பலி
யாழ்.கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் [...]