பொது மக்களின் உதவியை நாடியுள்ள வவுனியா பொலிசார்
வவுனியாவில் விபத்தை ஏற்படுத்தி ஒருவர் உயிரிழக்க காரணமான நபரை கண்டறிய வவுனியா பொலிசார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
வவுனியா, குருமன்காடு பகுதியில் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் விபத்தினை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் தப்பிச்சென்றுள்ளது. படுகாயமடைந்த நபர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் விபத்தினை ஏற்படுத்தி அவ்விடத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பித்து சென்ற நபர் தொடர்பில் தகவலை வழங்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த நபர் தொடர்பில் தகவல் கிடைக்கப்பெற்றால் அருகிலுள்ள பொலிஸ் நிலையம் அல்லது 071 85 91 343, 024 22 22 226 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பினை ஏற்படுத்தி வவுனியா போக்குவரத்து பொலிஸாரிக்கு தகவலை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.