யாழில் மாணவியை துன்புறுத்திய ஆசிரியை – பணத்தை கொடுத்து சமாளிக்க பாடசாலை நிர்வாகம் முயற்சி
சித்தன்கேணி ஸ்ரீ கணேச வித்தியாலயத்தில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவியை அடித்துத் துன்புறுத்தியமை தொடர்பில் சம்பந்தப்பட்ட ஆசிரியைக்கு எதிராக விசாரணைகளை சிறுவர் பாதுகாப்பு பிரிவு முன்னெடுத்துள்ளது.
கடந்த 10ஆம் திகதி மாணவி அடித்துத் துன்புறுத்தப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
சித்தன்கேணி கலைவாணி வீதியைச் சேர்ந்த ஹர்ஷா ஜெயதீசன் (வயது -7) என்ற மாணவியே அடித்து துன்புறுத்தப்பட்டுள்ளார்.
கடுமையான மன அழுத்தத்துக்கு உள்ளாகிய மாணவிக்கு உளநல மருத்துவ வல்லுநரினால் உளநல சிகிச்சை வழங்கப்பட்டதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.
மாணவியின் குடும்பத்துக்கு பண உதவியை வழங்கி இணக்கமாக முடிக்க பாடசாலை நிர்வாகம் முயற்சிக்கும் நிலையில் சங்கானை பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.