மின் கட்டண திருத்தம் தொடர்பாக எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்
2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அமைச்சரவையால் முன்மொழியப்பட்ட இடைக்கால மின் கட்டண திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில்லை என நேற்று (31) ஏகமனதாக தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக இந்த முடிவை எடுத்ததாக ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க அத தெரணவிடம் தெரிவித்தார்.