யாழில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு

யாழில் காணாமல் போன இளைஞன் ஒருவர் தோட்ட கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் நேற்றைய தினம் (15-12-2023) கோப்பாய் மத்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் 29 வயதுடைய நிரோசன் என்பவரே சடலமாக கோப்பாய் மத்தி பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த இளைஞன் கடந்த 13 ஆம் திகதி 4 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.
இந்நிலையில் குறித்த இளைஞனை உறவினர்கள் தேடி வந்த நிலையில் தோட்டக் கிணற்றில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதேவேளை சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
Related Post

எரிபொருள் குறித்த புதிய அறிவிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எரிபொருள் கோட்டாவை அதிகரிக்குமாறு கோரிக்கைகள் கிடைத்துள்ள [...]

ஆட்கடத்தலில் ஈடுபட்ட 14 இலங்கையர்களுக்குப் பிரான்சில் சிறைத்தண்டனை
ஐரோப்பா முழுவதும் ஆட்கடத்தல் குழுக்களை இயக்கியதற்காக 14 இலங்கை பிரஜைகளுக்கு வடக்கு பிரான்சில் [...]

மனிதபுதைகுழி விவகாரம் – ஊடகங்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள்
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது ஐந்தாம் நாளாக இன்று தொடர்ந்தும் [...]