வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் தம்பதியினரின் சடலம் மீட்ப்பு

வீடொன்றில் தம்பதியினர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்
அம்பலாந்தோட்டை ருஹுனு ரிதிகம மூன்றாம் கட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் இன்று (27) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் படுகொலை செய்யப்பட்ட நபரின் மைத்துனர் ஒருவர் அம்பலாந்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் அம்பலாந்தோட்டை பெலிகலகொட பிரதேசத்தை சேர்ந்தவர்.
குறித்த சந்தேகநபர் வீட்டுக்குள் புகுந்து கோடாரி மற்றும் கத்தியால் தாக்கி இந்த இரட்டை கொலையை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
61 வயதான வெங்கப்புலி ஆராச்சிகே சுனில் மற்றும் 56 வயதான ஹேவமானகே குசுமலதா என்ற திருமணமான தம்பதியே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சில காலமாக நிலவி வந்த தகராறு காரணமாக இந்த கொலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related Post

வாலுடன் பிறந்த பெண் குழந்தை
மெக்சிகோ நாட்டின் வடகிழக்கில் ஊரக பகுதியில் அமைந்த மருத்துவமனையில் கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்காக [...]

போக்குவரத்து சேவைகளுக்கு சேதம் – உடன் கைது செய்ய உத்தரவு
பொது போக்குவரத்து சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துபவர்களை உடன் கைது செய்யுமாறு போக்குவரத்து அமைச்சர் [...]

யாழில் காணாமல் போன 3 வயது சிறுமி காட்டுக்குள்ளிருந்து மீட்பு
மிருசுவில் வடக்கு பகுதியில் இன்று மாலை காணாமல் போன சிறுமி வீட்டில் இருந்து [...]