யாழில் காணாமல் போன 3 வயது சிறுமி காட்டுக்குள்ளிருந்து மீட்பு
மிருசுவில் வடக்கு பகுதியில் இன்று மாலை காணாமல் போன சிறுமி வீட்டில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு காட்டுக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென காணாமல் போயுள்ளார்.
சிறுமியின் பெற்றோர் அக்கம்பக்கத்தில் உள்ள அனைவர் வீடுகளிலும் தேடியுள்ளனர். பின்னர் சிறுமி வீட்டில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காட்டுப் பாதை வழியாக நடந்து அங்குள்ள ஒரு கோயிலை சென்றடைந்துள்ளார். சிறுமியின் கால் அடித்தளத்தினை வைத்து சிறுமி காட்டுக்குள் இருந்து மீட்கப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
வீட்டில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு காட்டுக்குள்ள கோவிலுக்குள் சிறுமி சென்றமை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
யாராவது தூக்கிக் கொண்டு போய் இருக்க சந்தர்ப்பம் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்