மட்டக்களப்பில் 27 வயது யுவதி உயிரிழப்பு – 3 பேர் வைத்தியசாலையில்

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மாங்காடு பிரதேசத்தில் சமைத்து உண்ட உணவு நஞ்சாகியதில் 27 வயது யுவதி நேற்று (08) ஒருவர் உயிரிழந்ததுடன் 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாங்காட்டு பிரதேசத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான 27 வயதுடைய உயேந்தினி என்பவரே இல்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்து பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் சம்பவதினமான நேற்று மதிய உணவினை உண்ட பின்னர் சுமார் 2 மணி அளவில் இதில் உயிரிழந்த பெண் மற்றும் அவரது 4 மற்றும் 7 வயது இரு குழந்தைகள் அவரது தாயார் உட்பட 4 பேர் வாந்தியெடுத்த நிலையில் மயங்கியதை அடுத்து அவர்களை கஞவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் 27 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளதுடன் எனைய 3 வரும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன்.
Related Post

காட்டு யானை தாக்கி 16 வயது மாணவி உயிரிழப்பு
ஹசலக்க, கங்கேயாய, பஹே எல பகுதியில் மாணவி ஒருவர் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு [...]

நாளை தினத்திற்கான மின்வெட்டு அறிவிப்பு
நாளை (23) 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை மேற்கொள்ள பொது [...]

புதினாச்செடியின் புதினங்கள்
புதினா இலையில் வைட்டமின்கள் தாதுப்பொருள்கள் நிறைய உள்ளன. எனவே புதினா எண்ணெய், உணவுப் [...]