24 வயதான இளைஞர் கொலை – ஹெரோயினுடன் காதலி கைது
கடந்த 11 ஆம் திகதி 24 வயதான இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இளைஞனின் காதலி கைதுசெய்யப்பட்டுள்ளார். காலி – அஹங்கம, மிதிகம பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் காதலி கைதாகியுள்ளார்.
தொலைபேசியில் தொடர்புகொண்டு இளைஞரை மிதிகமவிற்கு அழைத்த குறித்த பெண், அவரை கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இருவருக்கும் இடையே காதல் தொடர்பு காணப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தை அடுத்து மஹரகம பிரதேசத்தில் தலைமறைவாகியிருந்த நிலையில், சந்தேகநபரான பெண் 15 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.