கசிப்புடன் கைதான பெண் திடீர் மரணம்

பாணந்துறை வடக்கு பொலிஸாரால் நேற்று (24) இரவு கைது செய்யப்பட்ட பெண்ணொருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக பாணந்துறை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உயிரிழந்தவர் பாணந்துறை திக்கல பிரதேசத்தைச் சேர்ந்த நயனா ரோஷினி என்ற 52 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறிப்பிட்ட பெண் சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பாணந்துறை வடக்கு பொலிஸ் குழுவொன்று குறித்த வீட்டை சுற்றிவளைத்துள்ளனர்.
அதன் பின் குறித்த பெண் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் திடீரென சுகவீனமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அதன் பிரகாரம் குறித்த பெண்ணிடம் அவரது குடும்ப உறுப்பினர்களை அழைத்து வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டதுடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் சமந்த வெதகே மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த சேனாரத்ன தலைமையிலான பொலிஸ் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post

பாதுகாப்பு அமைச்சரின் வீடு முற்றுகை
ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரியும் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராகவும் மினுவாங்கொடை உடுகம்பொல புனித [...]

அரசாங்க வேலை பெற்றுக் கொடுப்பதாக கூறி மோசடி – இரு பெண்கள் கைது
அரச வேலை பெற்றுக் கொடுப்பதாக கூறி இளைஞர், யுவதிகளிடம் பணம் பெற்று மோசடி [...]

வவுனியாவில் புடவைக் கடைக்குள் இளைஞன் மீது கத்திக் குத்து
வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள புடவைக் கடை ஒன்றில் இளைஞன் ஒருவர் கத்திக் [...]