நுவரெலியா விபத்து – ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு
நுவரெலியா – நானுஓயா விபத்தில் காயமடைந்த மாணவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கவலைக்கிடமாக உள்ளவர்களை விமானப்படையினர் விமானம் மூலம் கொழும்புக்கு அழைத்து வருமாறும், ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.