யாழில் எலி கடித்த உணவுப் பொருட்கள் விற்பனை

யாழில், எலி கடித்த உணவுப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த வர்த்தகருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்.சாவகச்சோி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிற்குட்பட்ட மட்டுவில் பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று முன்தினம்(18.01.2023) பொதுச் சுகாதார பரிசோதகர்களால் மட்டுவில், சரசாலை ஆகிய பகுதிகளில் உள்ள உணவகங்கள், பலசரக்கு கடைகள் சோதனையிடப்பட்டிருந்தது.
இதன்போது மட்டுவில் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் எலி கடித்த உணவுப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த உணவக உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் 5 வர்த்தக நிலையங்களில் கண்டுபிடிக்கப்பட்ட காலாவதியான பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.
Related Post

யாழில் மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் – ஒருவர் பலி
யாழ்.கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் [...]

யாழ். பொலிஸாரினால் வேலன் சுவாமிகள் கைது
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக [...]

நாளை அதிபர் – ஆசிரியர்களின் 30 தொழிற்சங்கங்கள் இணைந்து பாரிய போராட்டம்
நாடு முழுவதும் நாளை ஒருநாள் அடையாள பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தினை நடத்த அதிபர், [...]