மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தைதிருநாள் பூஜை சிறப்பாக நடைபெற்றது


தைத்திருநாளை முன்னிட்டு இன்று காலை இந்து ஆலயங்களில் விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தைதிருநாள் பூஜை சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதி சௌந்தரராஜ குருக்களின் தலைமையில் தைப்பொங்கல் சிறப்பு பூஜை இன்று நடாத்தப்பட்டது.

இன்று காலை ஆலயத்திற்கு முன்பாக பொங்கல் பொங்கப்பட்டு சூரிய பகவானுக்கு படைக்கப்பட்டு விசேட பூஜை நடைபெற்றன.

அதனை தொடர்ந்து மாமாங்கேஸ்வரருக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்று தைதிருநாள் பூஜை சிறப்பாக நடைபெற்றது.

நாட்டில் அனைத்து மக்களும் நோய்நொடிகள் இன்றி சாந்தியும் சமாதானமுமாக வாழவேண்டி விசேட பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டது.

இன்றைய வழிபாடுகளில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டதுடன் வாழ்த்துகளையும் பரிமாறிக்கொண்டதை காணமுடிந்தது.

IMG 2721 IMG 2731 IMG 2734 IMG 2743 IMG 2749 IMG 2757 IMG 2760 IMG 2763 IMG 2766

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *