யாழில் இன்று அரசுக்கு எதிராக போராட்டம்
அதிகரித்த மின்சார கட்டண உயர்வைக் கைவிட வலியுறுத்தியும், உணவு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்க வலியுறுத்தியும் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடைபெறுகிறது.
அதன்படி யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் முன்பாக நடைபெறும் இந்த மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி ஏற்பாட்டில் நடைபெறுகிறது.