பொலிஸ் உயர் அதிகாரி மீது தாக்குதல் – இருவர் கைது
ஹோட்டலுக்கு செல்வதற்கான வழியை கூறாததால் பொலிஸ் உயர் அதிகாரியை மூர்க்கத்தனமாக தாக்கிய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் கல்கிசை பகுதியில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த பொலிஸ் அதிகாரி களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடமை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி தனது நண்பரைச் சந்தித்து இரவு உணவு உண்டுவிட்டு
பஸ்ஸில் ஏற கல்கிசைக்கு வந்து கொண்டிருந்தபோது காரில் வந்த இரு இளைஞர்கள் ஹோட்டலின் பெயரையும் வழியையும் கேட்டுள்ளனர்.
இருப்பினும் உயர் பொலிஸ் அதிகாரி பதில் கூறாமல் முன்னே சென்று கொண்டிருந்தபோது இரு இளைஞர்களும் காரில் இருந்து இறங்கி
அவரைத் தாக்கியதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.