முதல் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டியில் அவுஸ்திரேலியா அணி டக்வத்லுவிஸ் முறைப்படி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட இலங்கை தீர்மானித்தது.
அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 149 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் வனிது ஹசரங்க 3 விக்கெட்களையும் சாமிக, பினுர மற்றும் சமீர ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 19 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 122 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
பந்துவீச்சில் ஹசில்வூட் 4 விக்கெட்களையும் அடம் சம்பா 3 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.
Related Post

25 வது ஆசிய தடகள சம்பியன்ஷிப் – இலங்கைக்கு 2 வெண்கலப் பதக்கங்கள்
தாய்லாந்து, பேங்கொக்கில் நடைபெறும் 25 வது ஆசிய தடகள சம்பியன்ஷிப் போட்டியில் 2 [...]

உடுப்பிட்டி நவஜீவன் விளையாட்டுக்கழகம் கரப்பந்தாட்ட மைதானம் புதிதாக திறக்கப்பட்டது
உடுப்பிட்டி நவஜீவன் விளையாட்டுக்கழகத்தினரால் 08.04.2022 புதிதாக திறக்கப்பட்ட கரப்பந்தாட்ட மைதானத்தில் மாபெரும் கரப்பந்தாட்ட [...]

தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த முல்லைத்தீவு யுவதி
பாகிஸ்தானில் இடம்பெறும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்குகொண்ட முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி [...]