யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி வரலாற்று சாதனை

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

யாழ்ப்பாணம் – கொக்குவில் இந்துக் கல்லூரி தேசிய கரம் போட்டியில் இரண்டாம் இடத்தினை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இன்றையதினம் யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியின் பஞ்சலிங்கம் மண்டபத்தில் 30வது தேசிய கரம் போட்டிகளின் இறுதிப் போட்டிகள் நடைபெற்றன.

இந்த போட்டியில் 92 பாடசாலைளைச் சேர்ந்த 600 போட்டியாளர்கள் பங்குபற்றினர்.

17 வயதின் கீழ் ஆண்கள், பெண்கள் என இரு பிரிவினரும் மற்றும் 20 வயதின் கீழ் ஆண்கள், பெண்கள் பிரிவினர் என மொத்தமாக 4 பிரிவினர் இந்தப் போட்டியில் பங்குபற்றின.

இறுதிப் போட்டியில் 17 வயதின் கீழ் பெண்கள் பிரிவில் நுகேகொட பெண்கள் கல்லூரிக்கும், யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரிக்குமிடையே விறுவிறுப்பான போட்டிகள் இடம்பெற்றன.

இந்த போட்டியில் யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி இரண்டாம் இடத்தினை பெற்று கல்லூரியில் வரலாற்று சாதனை படைத்துள்ளது.

கொக்குவில் இந்துக் கல்லூரியின் வரலாற்றில் முதன் முதலாக இந்த சாதனை நிகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.