சாதனை படைத்த வவுனியா மாணவிகள்

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

நாட்டில் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான தேசிய மட்ட குத்துச்சண்டை போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை பெற்று வவுனியா மாவட்ட பாடசாலைகள் குத்துச்சண்டை தேசிய போட்டியில் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

2022 கல்வியமைச்சின் பாடசாலை மாணவர்களுக்கு இடையே நடத்தப்படும் தேசிய மட்ட குத்துச்சண்டை தேசிய போட்டி (21to 24) ஆகிய 4 நாட்கள் கண்டி நாவலப்பிட்டிய ஜெயதிலக விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இந்த போட்டியில் வவுனியா பாடசாலைகளை சேர்ந்த மாணவிகள் பங்குபற்றியிருந்தனர்.

இப் போட்டியில் சிறீராமபுரம் திருஞானசம்பந்தர் வித்தியாலய மாணவிகளான எல்.கஜேந்தினி (57) kg பிரிவில் தங்க பதக்கத்தையும் (1ம் இடம்) ,யூ.கீர்த்தனா (60) kg பிரிவில் தங்க பதக்கத்தையும் (1ம் இடம்) பெற்றிருந்தார்கள்.

அதேபோல் சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலய மாணவி எம்.வாலசிகா (54) kg பிரிவில் வெள்ளிப்பதக்கத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

பயிற்றுவிப்பாளர் நிக்சன் ரூபராஜ் நெறிப்படுத்தலில் இம் மாணவிகள் தயார்படுத்தப்பட்டு குத்துச்சண்டை தேசிய போட்டியில் மூன்று பதக்கங்களையும் பெற்று பெருமை சேர்த்துள்ளார்கள்.