15 வயது கர்ப்பிணி மாணவியை கடத்திச் சென்ற 24 வயது இளைஞன் கைது
15 வயதுடைய கர்ப்பிணி மாணவியை கடத்திச் சென்ற சந்தேகத்தில் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.
கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவியே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.
கர்ப்பிணியான மாணவி , நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகள் அதிகார சபையின் பொறுப்பில் அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் சந்தேக நபரால் மாணவி கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
கடத்தப்பட்ட மாணவி தற்காலிக விடுதி ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் தம்புள்ளை பிரதேசத்தில் உள்ள நண்பரின் வீட்டுக்கு மாணவியை அழைத்துச் சென்றபோதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.