தனியார் வகுப்புக்கு சென்ற 15 வயது சிறுமி மாயம்
தனியார் வகுப்புக்கு சென்ற 15 வயதான சிறுமி ஒருவர் காணாமல்போயுள்ளதாக பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் லுணுகல – சூரியகொட பகுதியில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளதாக தொியவருகின்றது.
காலை பிரத்தியேக வகுப்பு ஒன்றுக்கு சென்று வீடு திரும்பவில்லை என மாணவியின் தாயாரினால் லுணுகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
பொலிஸாரும் மாணவியின் உறவினர்களும் இணைந்து தேடுதலை மேற்கொண்டு வருவதுடன்,
மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.