இணையதளம் மூலம் விளம்பரம் – தகாத தொழிலில் பதின்மவயது யுவதி


வாகனமொன்றில் பயணம் செய்தபடி கொழும்பு நகருக்கு அருகில் தகாத தொழிலில் ஈடுபட்ட 17 வயது யுவதி உட்பட நான்கு பேர் இரண்டு கிராம் 190 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் நடமாடும் தகாத தொழில் விடுதியை நடத்திய நபர், 17 வயது யுவதி, அவரது சிறிய தாயார் மற்றும் ஒரு பெண் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தகாத தொழில் இணையதளம் மூலம் விளம்பரமும் செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக பல தகவல்கள் பொலிஸாருக்கு கிடைத்ததை அடுத்து இணையத்தளத்தை ஆய்வு செய்து அதில் வெளியாகி யிருந்த விளம்பரத்துடன் தொடர்பு கொண்டுள்ளனர்.

அதன் பின்னர் பொலிஸார் தரகர் ஒருவரை பயன்படுத்தியுள்ளனர். பம்பலப்பிட்டி கடலோர வீதியில் வைத்து அந்த வாகனத்திலிருந்து ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு தரகர் ஹோட்டலுக்கு சென்றுள்ளார்.

அங்கிருந்து அவர் கொடுத்த தகவலை அடுத்து தகாத தொழிலில் ஈடுபட்ட வாகனத்துடன் ஏனைய சந்தேக நபர்களையும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *