வவுனியாவில் வெட்டுக் காயங்களுடன் வீதியில் உயிருக்கு போராடிய இருவர்

வெட்டுக் காயங்களுடன் வீதியில் கிடந்து உயிருக்குப் போராடிய இருவர் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் முயற்சியால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் வவுனியா – சிதம்பரபுரம் கோமரசங்குளம் பகுதியில் உள்ள விவசாய பண்ணைக்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்றிருக்கின்றது.
குறித்த பகுதியூடாக பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் சென்றுகொண்டிருந்த சமயத்தில்
வீதியில் வெட்டுக்காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் காணப்பட்ட ஒருவரை நோயாளர் காவு வண்டியின் உதவியுடன்வைத்தியசாலையில் அனுமதித்திருந்தார்.
அத்துடன் மேலும் ஒருவரும் குறித்த பகுதியில் வெட்டுக்காயங்களுக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போத்தல்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தினாலே இருவரும் காயங்களுக்குள்ளாகியுள்ளதாவும்
அவர்களின் வயது 50, 53 எனவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவருவதுடன்
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிதம்பரபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Related Post

காரை நிறுத்த சொன்ன போக்குவரத்து காவலர் மீது தாக்குதல்
மேற்கு கோதாவரி மாவட்டம் பீமவரம் பகுதியில் காவலர் குமார் என்பவர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் [...]

குடும்ப தகராறு – மனைவி மற்றும் மச்சானை கொலை செய்த நபர்
நவகத்தேகம முல்லேகம பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரனும் சகோதரியும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். [...]

இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு
இன்று (17) திங்கடகிழமைக்கான மின்வெட்டு நேர விபரங்களை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. [...]