காரை நிறுத்த சொன்ன போக்குவரத்து காவலர் மீது தாக்குதல்

மேற்கு கோதாவரி மாவட்டம் பீமவரம் பகுதியில் காவலர் குமார் என்பவர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக அதிவேகமாக காரை ஓட்டிவந்த ஸ்ரீநிவாஸ் என்பவரிடம், காரை நிறுத்த சொல்லி போக்குவரத்து காவலர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
சிறிது தூரம் சென்று காரை நிறுத்திய ஸ்ரீநிவாஸ், தாம் மிதமான வேகத்தில் வந்ததாகக் கூறி போக்குவரத்து காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ஸ்ரீநிவாஸ் போக்குவரத்து காவலரை சரமாரியாக தாக்கியிருக்கிறார். பதிலுக்கு போக்குவரத்து காவலரும் அவரை தாக்கியுள்ளார்.
இதில் போக்குவரத்து காவலர் லேசான காயமடைந்த நிலையில், கார் ஓட்டுநர் ஸ்ரீநிவாஸை போலீசார் கைது செய்தனர்.
Related Post
யாழில் சடுதியாக அதிகரித்துள்ள கடல் உணவுகளின் விலை
காலநிலை வேறுபாடினால் யாழில் கடல் உணவுகளின் விலை அதிகரித்துள்ளது நகர்பகுதிகளிற்கு தேவையான கடல் [...]

கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை
இலங்கையில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு [...]

வாகன உதிரிபாகங்களின் விலைகள் 300 வீதத்திற்கும் மேலாக அதிகரிப்பு
சந்தையில் வாகன உதிரிபாகங்களின் விலைகள் 300 வீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் [...]