பிரபல பாடசாலை அருகில் விபச்சார விடுதி – 4 பேர் கைது
பிரபல ஆண்கள் பாடசாலை அருகில் மசாஜ் நிலையம் என்றபோர்வையில் இயங்கிவந்த விபச்சார விடுதி பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டு 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் கண்டி – பேராதனை வீதியில் உள்ள முன்னணி ஆண்கள் பாடசாலை அருகில் இடம்பெற்றிருக்கின்றது. மத்திய மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்னவின் விசேட உத்தரவின் பேரில் மாத்தளை நகரில் பொலிஸ் குழுவொன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பில்,
குறித்த இடத்தில் மசாஜ் நிலையம் நடத்துவதற்கு அனுமதிப்பத்திரம் இல்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். பிரதம பொலிஸ் பரிசோதகர் மற்றும் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் உத்தியோகத்தர் உள்ளிட்ட பொலிஸ் குழுவொன்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது கைது செய்யப்பட்ட யுவதிகள் 25 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அவர்கள் குருநாகல், அனுராதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.