12 மணி நேரம் நீர் விநியோகம் தடை
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை (22) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதனால் சுமார் 12 மணி நேரம் நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உஸ்வட்ட கேய்யாவ, பமுனுகம மற்றும் தல்தியவத்த ஆகிய பகுதிகளுக்கே நீர் விநியோகம் தடைப்படும்.
22.12.2022 அன்று மாலை 06.00 மணி முதல் 23.12.2022 நள்ளிரவு 12.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.