நாடளாவிய ரீதியில் இறைச்சியை கொண்டு செல்வதற்கு அனுமதி
நாடளாவிய ரீதியில் இறைச்சியை கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மாடுகள் மற்றும் ஆடுகள் பெருமளவில் உயிரிழந்தன.
தொற்றுநோய் காரணமாக விலங்குகள் உயிரிழக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அன்றைய நாட்களில் நிலவிய கடும் குளிர் காலநிலையே காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.